பணத்தகராறில் தொழிலாளி அடித்து கொலை

மைசூரு டவுனில் பணத்தகராறில் தொழிலாளி அடித்து கொலை;

Update:2023-10-28 00:15 IST

மைசூரு:

மைசூரு டவுன் பீடி கட்டும் தொழிலாளி காலனியை சேர்ந்தவர் ஆசிப் (வயது36). அதேப்பகுதியை சேர்ந்தவர் சலீம். இவர்கள் 2 பேரும் நண்பர்கள் ஆவர். இவர்கள் 2 பேருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் இருந்து வந்துள்ளது. இந்தநிலையில், அதேப்பகுதியில் உள்ள டீக்கடையில் ஆசிப் உட்கார்ந்திருந்தார். அப்போது டீக்கடைக்கு சலீம் வந்தார். அவர்கள் 2 பேரும் பேசிக் கொண்டிருந்தனர். என்னிடம் வாங்கிய பணத்தை திரும்ப கொடுக்கும்படி சலீம் ஆசிப்பிடம் கேட்டுள்ளார். இதனால் அவர்கள் 2 பேருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். அப்போது அருகில் கிடந்த கட்டையை எடுத்து சலீம், ஆசிப்பை சரமாரியாக தாக்கினார். இதில் சம்பவ இடத்திலேயே ஆசிப் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மைசூரு கே.ஆர்.ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் ஆசிப் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சலீம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து உதயகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சலீம் சிகிச்சை பெற்று வந்த பின்னர் அவரை போலீசார் கைது செய்ய உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்