தேசிய கல்வி கொள்கை, நாட்டின் கல்வி தரத்தை மாற்றும்: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு
தேசிய கல்வி கொள்கை, நாட்டின் கல்விதரத்தை மாற்றும் என்று தமிழக கவர்னர் ஆர்.என் ரவி தெரிவித்துள்ளார்.;
மைசூரு:
மைசூரு பல்கலைக்கழக நிறுவன நாள் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. இதில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு, மன்னர் நால்வடி கிருஷ்ணராஜ உடையார் உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-
மைசூரு மாகாணத்தின் சிறந்த மன்னன் என்று புகழப்பட்ட நால்வடி கிருஷ்ணராஜ உடையார் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இந்த பல்கலைக்கழகத்தை உருவாக்கினார். மைசூரு மாகாணத்தில் முதன்முறையாக திறக்கப்பட்டது இந்த பல்கலைக்கழம் தான். ஆங்கிலேய ஆட்சியில் பல லட்ச மாணவ-மாணவிகளுக்கு இந்த பல்கலைக்கழகம் கல்வி அறிவை வழங்கி உள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய கல்வி கொள்கை, நமது நாட்டில் கல்வியில் புரட்சிகரமான மாறுதல்களை ஏற்படுத்தும். கல்வி தரத்தை மாற்றும். இவ்வாறு அவர் பேசினார். இந்த விழாவில் இளவரசர் யதுவீர் உடையார், மைசூரு பல்கலைக்கழக துணைவேந்தர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.