எஸ்.ஐ. தேர்வு முறைகேட்டில் தொடர்புடைய அனைவர் மீதும் நடவடிக்கை- டி.கே.சிவக்குமார் வலியுறுத்தல்

எஸ்.ஐ தேர்வு முறைகேட்டில் தொடர்புடைய அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று டி.கே சிவகுமார் வலியுறுத்தியுள்ளார்.;

Update:2022-07-11 22:30 IST

பெங்களூரு:

கர்நாடக இளைஞர் காங்கிரஸ் மாநாடு நேற்று பெங்களூருவில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் கலந்து கொண்டு பேசியதாவது:-

நாட்டிற்கு சுதந்திரத்தை காங்கிரஸ் வாங்கி கொடுத்தது. அதை பறித்து கொள்ள பா.ஜனதா முயற்சி செய்கிறது. வீடுகளின் மீது தேசிய கொடியை ஏற்றுவதாக அந்த கட்சியினர் சொல்கிறார்கள். இது மகிழ்ச்சி தான். பா.ஜனதாவினர் யாரும் சுதந்திர போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. சுதந்திரம் எங்களுடையது என்கிறார்கள். சுதந்திர தின பவள விழாவையொட்டி காங்கிரசார் ஒவ்வொரு மாவட்டத்திலும் 75 கிலோ மீட்டர் பாதயாத்திரை மேற்கொள்ள வேண்டும் என்று சோனியா காந்தி உத்தரவிட்டுள்ளார். வருகிற ஆகஸ்டு 15-ந் தேதி ஒரு லட்சம் கைகளில் தேசிய கொடியை ஏந்தி பாதயாத்திரை நடத்த திட்டமிட்டுள்ளோம். இந்த நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தும் நோக்கத்தில் நான் அடுத்த ஒரு மாதத்தில் 80 சட்டசபை தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளேன். சப்-இன்ஸ்பெக்டர் (எஸ்.ஐ.) நியமன தேர்வில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்துள்ளன. இதில் உயர் போலீஸ் அதிகாரிகள் மட்டுமின்றி பெரிய நபர்களுக்கும் தொடர்பு உள்ளது. தவறு செய்த அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்