கழிவுநீர் கால்வாயை சீரமைக்காமல் அதிகாரிகள் அலட்சியம்: நகரசபை மீது பொதுமக்கள் அதிருப்தி

சிக்கமக்களூருருவில் கழிவு நீர் கால்வாயை நகரசபை அதிகாரிகள் சீரமைக்காமல் அலட்சியமாக உள்ளனர். இதனால் நகரசபை மீது பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.;

Update:2022-08-17 22:10 IST

சிக்கமகளூரு:

கழிவுநீர் கால்வாய்

சிக்கமகளூருருவில் ஏராளமான இடங்களில் கழிவு நீர் கால்வாய் முறையாக பராமரிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த சாக்கடை கால்வாய் சீரமைப்பிற்காகவும், புதிய கால்வாய் அமைப்பதற்காகவும் கடந்த 10 ஆண்டுகளில் ரூ.80 கோடி வரை மாநில அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. ஆனால் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் சரிவர நிறைவேறவில்லை.

மேலும் உடைந்துபோன சாக்கடை கால்வாயில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலைகளில் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் பொதுமக்கள், பள்ளி மாணவ-மாணவிகள் சாலையில் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வாகனங்களில் சென்றால் நடந்து செல்பவர்கள் மீது அந்த கழிவு நீர் படுகிறது. மேலும் துர்நாற்றம் வீசுவதால் மூக்கை பிடித்துக் கொண்டுதான் செல்லவேண்டியுள்ளது.

நடவடிக்கை எடுக்கவில்லை

இது குறித்து பலமுறை பொதுமக்கள், நகரசபைக்கு புகார் அளித்தனர். ஆனால் நகரசபை அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிது. இதனால் நகரசபையை

கண்டித்து பொதுமக்கள் போராட்டம் நடத்த முன் வந்துள்ளனர். ஏற்கனவே மாவட்ட பொறுப்பு மந்திரி பைரதி பசவராஜ் கழிவு நீர் கால்வாய் பணிகளை சரிவர செய்யாத ஒபந்ததாரர் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி கூறினார். மேலும் அந்த ஒப்பந்ததாரர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டுள்ளார்.

போராட்டம் நடத்தப்படும்

இந்நிலையில் நகரசபை அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் அலட்சியமாக செயல்படுவதால், பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். மேலும் மாவட்ட நிர்வாகம் தாமாக முன் வந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இல்லையென்றால் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்