ஜாலஹள்ளி விமான படை தளத்தின் கமாண்டராக சரப்ஜித் சிங் பொறுப்பு ஏற்பு

ஜாலஹள்ளி விமானப்படை தளத்தின் கமாண்டராக சரப்ஜித் சிங் பொறுப்பு ஏற்றார்.;

Update:2022-09-01 23:04 IST

பெங்களூரு:

பெங்களூரு ஜாலஹள்ளி விமான படை தளத்தின் கமாண்டராக பணியாற்றி வந்த நந்குமார் நாயக்கின் பதவி காலம் முடிந்தது. இதனால் விமான படை தளத்தின் புதிய கமாண்டராக நேற்று சரப்ஜித் சிங் பொறுப்பு ஏற்றுக்கொண்டார். சரப்ஜித் சிங்கிடம், நந்குமார் நாயக் தனது பொறுப்புகளை ஒப்படைத்து வாழ்த்துகளை தெரிவித்தார். புதிய கமாண்டராக பொறுப்பு ஏற்று உள்ள சரப்ஜித் சிங் விமான படையில் கடந்த 30 ஆண்டுகளாக பல்வேறு பொறுப்புகளை வகித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்