சிக்கமகளூருவில், தலித் அமைப்பினர் போராட்டம்
தலித் மக்கள் படுகொலை சம்பவங்களை கண்டித்து சிக்கமகளூருவில் அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர்.;
சிக்கமகளூரு:
நாட்டில் தலித் மக்கள் படுகொலை சம்பவங்கள் கண்டித்தும், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்ககோரியும் சிக்கமகளூரு ஆசாத் பூங்காவில் தலித் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-
ராஜஸ்தான் மாநிலத்தில் தலித் ஒருவர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து போராட்டக் குழுவினர் போராட்டம் நடத்தினர். அப்போது சிலர் போராட்ட குழுவை அவதூறாக பேசி பேனரை கிழித்துள்ளனர். இது கண்டிக்கத்தக்கது. நாட்டில் தலித் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் படுகொலை சம்பவம் நிரந்தரமாக நடந்து வருகிறது.
இதனை தடுத்து கொலை குற்றவாளிகள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். பின்னர் இதுதொடர்பாக அவர்கள், சிக்கமகளூரு மாவட்ட துணை கலெக்டர் ரூபாவை சந்தித்து மனு ஒன்றை கொடுத்துவிட்டு கலைந்து சென்றனர். இதேபோல் ஆல்தூரில், அப்பகுதியை சேர்ந்த தலித் அமைப்பினர் தீப்பந்தம் ஏந்தி ஊர்வலமாக சென்று போராட்டம் நடத்தினர்.