காட்டு யானை தாக்கி வாலிபர் சாவு

உன்சூரில் காட்டு யானை தாக்கி வாலிபர் சாவு;

Update:2023-10-28 00:15 IST

ைமசூரு மாவட்டம் உன்சூர் தாலுகா வீரனஒசஹள்ளி அருகே மாஸ்திகுடி கிராமம் நாகரஒலே வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் இருந்து கடந்த சில தினங்களாக காட்டு யானை ஒன்று வெளியேறி தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகிறது. இதனால் மக்கள் விளைநிலங்களுக்கு செல்லவே பீதியில் இருந்து வருகிறார்கள். இந்த நிலையில் அந்த கிராமத்தை சேர்ந்த வசந்தா (வயது 36) என்ற விவசாய கூலி தொழிலாளி, நேற்று காலை வனப்பகுதியையொட்டி உள்ள மக்காச்சோள தோட்டத்துக்கு வேலைக்கு சென்றார். அப்போது அவர் தோட்டத்தில் வேலை பார்த்து கொண்டிருந்தார். அந்த சமயத்தில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று, மக்காச்சோள தோட்டத்துக்குள் புகுந்தது. காட்டு யானையை பார்த்து பதறிபோன வசந்தா அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். ஆனாலும் அதற்குள் காட்டு யானை அவரை தும்பிக்கையால் தூக்கி வீசியதுடன், காலால் ஓங்கி மிதித்தது. இதில் வசந்தா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்