திருமணம் ஆகாத விரக்தியில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

திருமணம் ஆகாத விரக்தியில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2024-08-27 18:53 GMT

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம் சிருங்கேரி தாலுகா கும்பேனபயிலு கிராமத்தை சேர்ந்தவர் அருண் (வயது35). இவர் கூலி வேலை செய்து வந்தார். அருணுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இதனால் அவர் மன கவலையில் இருந்து வந்தார். இதுகுறித்து தனது குடும்பத்தினர், நண்பர்களிடம் கூறி அழுதுள்ளார். அப்போது அருணுக்கு அவர்கள் ஆறுதல் கூறி வந்தனர்.

இந்தநிலையில், சம்பவத்தன்று அருண் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் சிருங்கேரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

பின்னர் அருணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிருங்கேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து சிருங்கேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்