மணிப்பூரில் வாகன சோதனையில் பெண்கள்!

மணிப்பூரில் வடக்கு இம்பால் பகுதியில் ராணுவத்தையும் காவல்துறையும் நம்பாமல் வாகனத்தணிக்கையில் பெண்கள் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2023-06-29 08:54 GMT

இம்பால்,

மணிப்பூரில் மைதேயி சமூகத்தினர் மற்றும் குகி பழங்குடியினர் இடையே கடந்த மாதம் 3-ந்தேதி முதல் வன்முறை நீடித்து வருகிறது. 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த இந்த வன்முறைக்கு பா.ஜ.க.வின் பிளவுபடுத்தும் அரசியலே காரணம் என்பது காங்கிரசின் விமர்சனமாகும்.

மணிப்பூரில் உள்ள பெண் ஆர்வலர்கள் வேண்டும் என்றே வழிகளை மறித்து பாதுகாப்பு படையினரின் நடவடிக்கைகளில் தலையிடுகின்றனர். இத்தகைய தேவையற்ற குறுக்கீடுகள் உயிர்களையும் உடைமைகளையும் காப்பாற்றும் முக்கியமான சூழ்நிலைகளின் போது பாதுகாப்பு படையினரின் நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்துகிறது.

மாநிலத்தில் அமைதியை மீட்டெடுப்பதற்கான எங்களின் அனைத்து நடவடிக்கைகள் மற்றும் முயற்சிகளுக்கு ஆதரவு அளிக்குமாறு அனைத்து தரப்பு மக்களிடமும் இந்திய ராணுவம் வேண்டுகோள் விடுத்தது.

இந்தநிலையில், மணிப்பூரில் வடக்கு இம்பால் பகுதியில் ராணுவத்தையும் காவல்துறையும் நம்பாமல் வாகனத்தணிக்கையில் பெண்கள் ஈடுபட்டுள்ளனர். 2 மாதங்களாக ஊருக்குள் வரும் வாகனங்களை மெய்தி இனப்பெண்கள் நிறுத்தி சோதனையிட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags:    

மேலும் செய்திகள்