திருமண விழாவில் உணவு பரிமாற தாமதம்: இளைஞர் சுட்டுக்கொலை

திருமண விழாவில் உணவு பரிமாற தாமதமானதால் இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2024-12-14 16:21 GMT

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் பரிதாபாத் மாவட்டம் சைனிக் பகுதியில் நேற்று இரவு ஜெய் லகானி என்பவரின் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. திருமண நிகழ்ச்சிக்கு அவரின் நண்பர்களான மோனு, மோகித் ஆகியோர் வந்துள்ளனர்.

திருமண நிகழ்ச்சியில் உணவு பரிமாற உணவக ஊழியர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்தனர். உணவு பரிமாறும் ஊழியராக முபாரக் என்ற இளைஞரும் பணியாற்றினார்.

இந்நிலையில், திருமணத்திற்கு வந்திருந்த மோனு, மோகித் உணவு சாப்பிட உணவு மேஜையில் அமர்ந்திருந்தனர். அவர்கள் முபாரக்கிடம் தங்களுக்கு தேவையான உணவுகளை மேஜைக்கு கொண்டுவரும்படி கூறினர்.

இதையடுத்து, முபாரக் உணவுகளை எடுத்துவர சென்றுள்ளார். ஆனால், உணவுகளை கொண்டுவருவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மோனு, மோகித் உணவு பரிமாறும் பணியில் இருந்த முபாரக் இடம் வாக்குவாதம் செய்துள்ளனர். வாக்குவாதம் முற்றிய நிலையில் மோனு வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு முபாரக்கை மோகித் சுட்டுள்ளார்.

இந்த துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்த முபாரக்கை மீட்ட அங்கிருந்தவர்கள் அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், முபாரக்கை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் மோனு, மோகித்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்