நடிகர் அமிதாப் பச்சன் பங்களா அருகே ஆட்டோவில் பெண் மானபங்கம்

நடிகர் அமிதாப் பச்சன் பங்களா அருகே ஆட்டோ ரிக்சாவில் பயணித்த பெண் மானபங்கம் செய்யப்பட்டார்.;

Update:2023-02-18 15:50 IST



மும்பை,


மராட்டியத்தின் மும்பை நகரில் ஜுகு பகுதியில், பிரபல இந்தி திரையுலக நடிகர் அமிதாப் பச்சனின் பிரதீக்சா என்ற பங்களா அமைந்து உள்ளது. அந்த வழியே ஆட்டோ ரிக்சா ஒன்றில் பெண் ஒருவர் பயணம் செய்து உள்ளார்.

அந்த ஆட்டோ, சாலை சந்திப்பு அருகே இரவு 10 மணியளவில் சென்று உள்ளது. அப்போது, ஒருவர் ஆட்டோவில் ஏறுவதுபோல் அதனை அணுகி உள்ளார். இதன்பின்னர், ஆட்டோவில் இருந்த பெண்ணை நெருங்கி அவருக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்துவிட்டு, தப்பி சென்று உள்ளார்.

இதுபற்றி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து போலீசார் பிரிவு 354-ன் கீழ் வழக்கு பதிவு செய்து தேடுதல் வேட்டை நடத்தினர்.

இதன்படி, அந்த பகுதியில் உள்ள 15-க்கும் மேற்பட்ட சி.சி.டி.வி. கேமிராக்களில் உள்ள காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில், அரவிந்த் அஜய் வகேலா (வயது 47) என்பவரை பிடித்து விசாரித்து உள்ளனர்.

அதில், அந்நபர் பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த விவரங்களை ஒப்பு கொண்டுள்ளார். இதனை தொடர்ந்து குற்றவாளியான அஜய் வகேலாவை கைது செய்தனர்.

அவர், ஜுகு பகுதியில் கிறிஸ்தவ ஆலயம் அருகே சாலையில் பொருட்களை வைத்து, அவற்றை விற்பனை செய்து வந்து உள்ளார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்