3 முறை கர்ப்பம் கலைந்ததால் விஷம் குடித்து பெண் தற்கொலை

சாகர் அருகே 3 முறை கர்ப்பம் கலைந்ததால் விஷம் குடித்து பெண் தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2022-06-14 15:28 GMT

சிவமொக்கா;

சிவமொக்கா மாவட்டம் சாகர் தாலுகா காஸ்பாடி மளலிகொப்பா கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவருக்கு, நவீன்குமார் என்பவருடன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஆனால் தம்பதிக்கு குழந்தை இல்லை. அதாவது ராஜேஸ்வரி 2 முறை கர்ப்பம் தரித்தும் அது கலைந்துள்ளது.

இதையடுத்து 3-வது முறையும் ராஜேஸ்வரி கர்ப்பம் தரித்துள்ளார். ஆனால் பல்வேறு காரணங்களால் 3-வது முறையும் ராஜேஸ்வரியின் கர்ப்பம் கலைந்துள்ளது. இதனால் தன்னால் குழந்தை பெற்றெடுக்க முடியாது என்று ராஜேஸ்வரி மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.

இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாதபோது ராஜேஸ்வரி விஷ குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை, குடும்பத்தினர் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக உடுப்பி மணிப்பால் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆனாலும் நேற்றுமுன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி ராஜேஸ்வரி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து சாகர் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்