காட்டு யானைகள் அட்டகாசம்; நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் கோரிக்கை

குண்டலுபேட்டை அருகே எலச்செட்டிஹள்ளியில் காட்டு யானைகள் அட்டகாசத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Update: 2022-09-05 15:13 GMT

கொள்ளேகால்;


சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டை தாலுகா காடாஞ்சி கிராமம் எலச்செட்டிஹள்ளி வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இதனால் யானைகள், புலி, சிறுத்தை போன்ற விலங்குகள் அடிக்கடி இரைதேடி கிராமத்திற்குள் வருகிறது. அவ்வாறு வரும் யானைகள் தோட்டங்களில் இருக்கும் நெற்பயிர்கள் மற்றும் பிற பயிர்களை மிதித்து நாசப்படுத்திவிட்டு செல்கின்றன.

இதனால் ஏராளமான விவசாய நிலங்கள் நாசமானது. மேலும் யானைகளை தடுக்க அமைக்கப்பட்ட சோலார் வேலிகள், தடுப்பு வேலிகளை யானைகள் மிதித்து சேதப்படுத்திவிட்டு சென்றுள்ளன. இதனால் யானைகள் மீண்டும் தோட்டத்திற்குள் வருவதை தடுக்க முடியவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்தனர்.

மேலும் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இந்த நிலையில் நேற்று இது குறித்து தகவல் அறிந்த வனத்துறை அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தினர். அப்போது பொதுமக்கள் யானைகள் நடமாட்டத்தை தடுக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

இதை ஏற்ற வனத்துறை அதிகாரிகள் உடனே வன ஊழியர்களை அழைத்து எச்சரிக்கை விடுத்தனர். மேலும் யானைகள் அட்டகாசத்தை தடுக்க புதிய வழிமுறைகளை கடைபிடிக்கும்படி கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்