இன்டெல் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் விபத்தில் பலி- மும்பையில் சைக்கிளிங் சென்ற போது சோகம்

இன்டெல் இந்தியா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நேற்று அதிகாலை பாம்பீச் சாலையில் சைக்கிள் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.

Update: 2024-02-29 14:00 GMT

மும்பை,  

மும்பை செம்பூரை சேர்ந்தவர் அவதார் சைனி (வயது68). இவர் இன்டெல் இ்ந்தியா முன்னாள் தலைவராக இருந்து வந்தார். நேற்று   அதிகாலை பாம்பீச் சாலையில் சைக்கிள் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.

அந்த சாலையில் நடைபயிற்சி மற்றும் ஓட்டப்பந்தயம் போன்றவற்றிக்கு அனுமதி கிடையாத நிலையில் வாகனங்கள் அதிவேகமாக சென்று வந்தது. அப்போது வேகமாக வந்த வாகனம் ஒன்று அவதார் சைனி ஓட்டி சென்ற சைக்கிள் மீது மோதி விபத்து ஏற்பட்டது.

இதனால் சாலையில் விழுந்து பலத்த காயமடைந்தார். விபத்து ஏற்படுத்திய வாகன டிரைவர் ஹருஷிகேஷ் காடே என்பவர் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றார். ஆனால் சைக்கிள் இடிபாடுகளில் வாகன டயர் சிக்கி கொண்டதால் தப்பிக்க முடியவில்லை.

இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் டிரைவரை மடக்கி பிடித்தனர். காயமடைந்த அவதார் சைனியை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர் நடத்திய பரிசோதனையில் உயிரிழந்ததாக தெரிவித்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்