என்ன வேலையாக இருக்கும்...? தனியார் நிறுவன வளாகத்தில் உலவிய ஆண் சிங்கம்

குஜராத்தில் தனியார் நிறுவனத்திற்குள் புகுந்த ஆண் சிங்கம் ஒன்று வளாகத்தில் உலவியபடி காணப்பட்டது.

Update: 2023-02-25 12:32 GMT



ஆமதாபாத்,


குஜராத்தின் அம்ரேலி மாவட்டத்தில் தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், அந்த நிறுவனத்தின் வளாக பகுதிக்குள் ஆட்கள் யாரும் இல்லாத சூழலில், ஆண் சிங்கம் ஒன்று புகுந்து உள்ளது.

அது, வந்த வழி தெரியாமல் நாலாபுறமும் பார்த்தபடி உலவியபடி காணப்பட்டது. இதன்பின்னர் அது வெளியேறி விட்டது. இதுபற்றிய வீடியோ வெளிவந்து வைரலானது. இதனால், அந்த பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்தனர்.

அதனை வன துறை அதிகாரிகள் அந்த பகுதியில் தேடியுள்ளனர். ஆனால், அந்த சிங்கம் எந்த பகுதிக்கு சென்றது என அதிகாரிகளால் கண்டறிய முடியவில்லை. இதுவரை அவர்களால் அதனை பிடிக்கவும் முடியவில்லை.

இதே அம்ரேலி மாவட்டத்தின் தெருக்களில் சமீபத்தில், ஒரு கும்பலாக ஆண் மற்றும் பெண் என 8 சிங்கங்கள் சுற்றி திரிந்தன. அந்த பரபரப்பு அடங்குவதற்குள் தனியார் நிறுவன வளாகத்திற்குள் ஆண் சிங்கம் தனியாக உலவிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்