பெங்களூரு-வேளாங்கண்ணி இடையே வாராந்திர சிறப்பு ரெயில்

கோடை விடுமுறையையொட்டி பெங்களூரு-வேளாங்கண்ணி இடையே வாராந்திர சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும்என்று தென்மேற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

Update: 2023-03-21 18:45 GMT

பெங்களூரு:-

தென்மேற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கோடை விடுமுறையை முன்னிட்டு வாராந்திர சிறப்பு ரெயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி வருகிற 25-ந் தேதி பெங்களூரு கே.எஸ்.ஆர். ரெயில் நிலையத்தில் இருந்து(வண்டி எண்:06547) சிறப்பு ரெயில் காலை 7.50 மணிக்கு புறப்பட்டு, அன்றைய நாள் இரவு 8.30 மணிக்கு வேளாங்கண்ணியை சென்றடையும். இந்த ரெயில் சேவை ஏப்ரல் 1-ந் தேதி, 8-ந் தேதி மற்றும் 15-ந் தேதிகளில் இயக்கப்படும். இதேபோல் மறுமார்க்கமாக வேளாண்கண்ணியில் இருந்து வருகிற 26-ந் தேதி இரவு 11.55 மணிக்கு (வண்டி எண்:06548) வாராந்திர சிறப்பு ரெயில் புறப்பட்டு, மறுநாள் காலையில் பிற்பகல் 12.30 மணிக்கு கே.எஸ்.ஆர். பெங்களூரு ரெயில் நிலையத்திற்கு வந்து சேரும். இந்த ரெயில் சேவை ஏப்ரல் 2-ந் தேதி, 9-ந் தேதி மற்றும் 16-ந் தேதிகளில் இயக்கப்படும். வாராந்திர சிறப்பு ரெயில் பெங்களூரு கண்டோன்மண்ட், கே.ஆர்.புரம், பங்காருப்பேட்டை, சேலம், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், நீடாமங்கலம், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய ரெயில் நிலையங்கள் இருமார்க்கமாக நின்று செல்லும். இந்த ரெயிலில் ஏ.சி, படுக்கை வசதிகள் உள்பட 22 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்