வயநாடு பேரிடர்... 3 நாட்களுக்கு இலவச சேவை வழங்கும் பிஎஸ்என்எல்

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், மீட்பு பணிகளுக்கும் பிஎஸ்என்எல் இலவச சேவையை வழங்குகிறது.

Update: 2024-08-03 08:00 GMT

வயநாடு,

கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த 29-ந்தேதி ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி இதுவரை 340க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பல்வேறு தரப்பினர் வயநாட்டிற்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் மீட்பு பணிகளுக்கும் ஆதரவளிக்கும் வகையில், வயநாடு மாவட்டம் மற்றும் நிலம்பூர் தாலுக்காவில் உள்ள அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் மூன்று நாட்களுக்கு இலவச வரம்பற்ற அழைப்பு மற்றும் டேட்டா பயன்பாட்டு வசதியை வழங்குவதாக பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது. அத்துடன், பயனர்கள் ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்களையும் பெறுவார்கள்.

மேலும் சூரல்மாலா மற்றும் முண்டக்கை கிராமங்களில் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் இலவச மொபைல் இணைப்பை பிஎஸ்என்எல் வழங்குகிறது. சூரல்மாலாவில் உள்ள ஒரே மொபைல் டவர், பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு சொந்தமானது. சூரல்மலை மற்றும் மேப்பாடி மொபைல் டவர்கள் போர்க்கால அடிப்படையில் 4ஜிக்கு மாற்றப்பட்டுள்ளன.

ஏற்கெனவே, நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 3 நாட்கள் இலவச சேவையை ஏர்டெல் நிறுவனம் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.  

Tags:    

மேலும் செய்திகள்