வாக்கு செலுத்தி கடமையை நிறைவேற்றுங்கள் - பிரதமர் மோடி

தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் அனைவரும் வாக்களிக்குமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2024-05-13 02:28 GMT

புதுடெல்லி,

96 தொகுதிகளுக்கான 4-ம் கட்ட நாடாளுமன்ற தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் அனைவரும் வாக்களிக்குமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்து இருப்பதாவது;

"மக்களவை தேர்தலின் 4வது கட்டமாக இன்று 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 96 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது. இந்தத் தொகுதிகளில் மக்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிப்பார்கள் என்றும், இளம் வாக்காளர்கள் மற்றும் பெண் வாக்காளர்கள் தவறாது வாக்குகளை செலுத்துவார்கள் என்றும் நான் நம்புகிறேன். வாருங்கள், அனைவரும் நமது கடமையைச் செய்து நமது ஜனநாயகத்தை வலுப்படுத்துவோம்." 

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்..  

Tags:    

மேலும் செய்திகள்