ரூ.2 கோடி சொத்து; 3 கார்கள்- வினேஷ் போகத் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா ?

காங்கிரஸ் சார்பில் ஜுலானா சட்டமன்ற தொகுதியில் வினேஷ் போகத் போட்டியிடுகிறார்.

Update: 2024-09-12 10:05 GMT

சண்டிகர்,

பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்த போட்டியின் இறுதி சுற்றுக்கு முன்னேறிய இந்திய வீராங்கனை வினேஷ் போகத், போட்டியன்று 50 கிலோவை விட 100 கிராம் எடை கூடுதலாக இருப்பதாக கூறி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் மனமுடைந்த அவர் மல்யுத்தப் போட்டிகளிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

இதனை தொடர்ந்து வினேஷ் போகத் மற்றும் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா ஆகிய இருவரும் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். அரியானாவில் அடுத்த மாதம் 5-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் சார்பில் ஜுலானா தொகுதியில் வினேஷ் போகத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஜுலானா தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வினேஷ் போகத் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

இந்த நிலையில், அவரது சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி அவருக்கு ரூ.35 லட்சம் மதிப்புள்ள வோல்வோ கார், 12 லட்சம் மதிப்புள்ள ஹூண்டாய் கார், ரூ.17 லட்சம் மதிப்புள்ள டொயட்டா இன்னோவா கார் என 3 கார்கள் உள்ளன. அதில் ஒரு கார் கடன் பெற்று வாங்கி உள்ளார். அதற்காக வட்டி செலுத்தி வருகிறார். 2023- 24 நிதியாண்டில் ரூ.13,85,000 வருமானம் வந்துள்ளது. இதற்காக ரூ.1.95 லட்சம் வரி கட்டி உள்ளார்.ரூ. 2 கோடி மதிப்புள்ள அசையா சொத்து உள்ளது" இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்