மத்தியப் பிரதேசம்: கைத்துப்பாக்கியால் கேக் வெட்டிய கிராமத் தலைவர் மீது வழக்குப்பதிவு

மத்தியப் பிரதேசத்தில் கைத்துப்பாக்கியால் கேக் வெட்டிய கிராமத் தலைவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Update: 2022-11-20 16:07 GMT

பிந்த்,

மத்தியப் பிரதேசம் மாநிலம் பிந்த் மாவட்டத்தில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது நாட்டுத் துப்பாக்கியால் கேக் வெட்டி அதை சமூக ஊடகங்களில் நேரடியாக ஒளிபரப்பியதாக கிராம தலைவர் மற்றும் மேலும் இருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நவம்பர் 16-ந்தேதி அன்று கோனா ஹரிதாஸ்புரா கிராமத்தில் நடந்ததாக துணைப் பிரிவு காவல் அதிகாரி அரவிந்த் ஷா கூறினார். கிராம தலைவர் சட்ட விரோதமான நாட்டுத் துப்பாக்கியால் கேக் வெட்டிக் கொண்டாடியதை பேஸ்புக்கில் நேரலையில் ஒளிபரப்பியதாக அவர் தெரிவித்தார்.

மேலும், குற்றம் சாட்டப்பட்ட மூவருக்கு எதிராக ஆயுதச் சட்டத்தின் தொடர்புடைய விதிகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களிடமிருந்து சட்டவிரோத ஆயுதம் மற்றும் இரண்டு தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டதாக கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்