மும்பையில் விநாயகர் சதுர்த்தியையொட்டி விடிய, விடிய பெஸ்ட் பஸ் சேவை

மும்பையில் விநாயகர் சதுர்த்தியையொட்டி விடிய, விடிய பெஸ்ட் பஸ்கள் இயக்கப்படும் என பெஸ்ட் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Update: 2022-08-23 21:25 GMT

மும்பை,



மும்பையில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் வரும் 31-ந் தேதி தொடங்குகிறது. இந்தநிலையில் பக்தர்கள் மண்டல்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய வசதியாக 9 வழிதடங்களில் விடிய, விடிய பஸ் சேவை இயக்கப்படும் என பெஸ்ட் அறிவித்து உள்ளது.

இந்த பஸ்கள் வரும் 31-ந் தேதி முதல் அடுத்த மாதம் 8-ந் தேதி வரை இரவு 11 மணி முதல் அதிகாலை 6 மணி வரை இயக்கப்படும்.

இந்த இரவு நேர சிறப்பு பஸ்கள் கொலபா டெப்போ - பாந்திரா ரெக்குலமேஷன் பஸ் நிலையம் (வழித்தட எண்:1), ஒஷிவாரா டெப்போ - ஜே.ஜே. ஆஸ்பத்திரி (4), விக்ரோலி டெப்போ - ஜே.ஜே. ஆஸ்பத்திரி (7), சிவாஜி நகர் - ஜே.ஜே. ஆஸ்பத்திரி (8), ராணி லட்சுமிபாய் சவுக் - கொலபா டெப்போ (66 லிமிடட்), மாகிம் பஸ் நிலையம் - போரிவிலி ரெயில் நிலையம் மேற்கு (202 லிமிடட்), ராணி லட்சுமிபாய் சவுக் - மகாரானாபிராப் சவுக் முல்லுண்டு (சி-302), பேக்பே டெப்போ - தாராவி டெப்போ (சி-305), மாகிம் பஸ் நிலையம் - போரிவிலி நிலையம் கிழக்கு (சி-440).

இதேபோல தேவைக்கு ஏற்ப கூடுதல் வழித்தடங்களில் பெஸ்ட் பஸ்கள் இரவு முழுவதும் இயக்கப்படும் என பெஸ்ட் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்