உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் சிக்கிய தொழிலாளர்கள் அனைவரும் பத்திரமாக மீட்பு
உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்க குழாய்க்குள் சென்றது மீட்புக்குழு
உத்தரகாண்டில் சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்ட பின், அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்காக ராணுவ விமானம் தயார் நிலையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
உத்தரகாண்ட் சுரங்கத்தின் நுழைவு பகுதியில் தற்காலிக மருத்துவ வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தொழிலாளர்களை மீட்டு கொண்டு வந்தவுடன், அவர்களுக்கு இங்கு பரிசோதனைகள் செய்யப்படும். எதாவது பிரச்சினைகள் கண்டறியப்பட்டால் தொழிலாளர்களுக்கு சிகிச்சை அளிக்க 8 படுக்கைகளும் தயாராக உள்ளன. மூத்த மருத்துவர்கள் அடங்கிய குழுவும் அங்கு பணியில் உள்ளது.
சுரங்கத்தில் இருந்து மீட்டு கொண்டு வரப்படும் தொழிலாளர்களை பார்க்க அவர்களது குடும்பத்தினர் ஆவலுடன் உள்ளனர். சுரங்கத்தின் வாயில் அருகே ஆம்புலன்ஸ்களும் தயார் நிலையில் உள்ளது. மீட்பு பணி வெற்றிகரமாக நிறைவடைய வேண்டும் என்று ஒட்டு மொத்த தேசமும் பிரார்த்தித்து வருகிறது. இதனிடையே, சுரங்கத்தில் இருந்து மீட்டு கொண்டு வரப்படும் தொழிலாளர்களை வரவேற்பதற்காக மாலைகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்கள் சற்று நேரத்தில் மீட்கப்பட உள்ளனர். சுரங்கத்தில் இருந்து தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர் என்ற செய்தியை அறிய ஒட்டு மொத்த தேசமும் ஆவலுடன் உள்ளது.
இந்த நிலையில், சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளி ஒருவரின் தாயார் இது குறித்து கூறியதாவது: எனது மகன் சிக்கி 17 நாட்கள் ஆகிவிட்டன. எனது மகன் வந்துவிட்டால் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைவேன். எனது மகனை கண்ணால் காணும் வரை இது எதையும் நான் நம்ப மாட்டேன்” என்றார்.
சுரங்கத்தில் இருந்து மீட்கப்படும் தொழிலாளர்கள் 41 பேரும் சின்னாலிசூரில் உள்ள சமூக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட உள்ளனர். இதற்காக மருத்துவமனையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களில் சிலர் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும், இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
41 தொழிலாளர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்க தயார் நிலையில் சுரங்கத்தின் வாயிலில் தற்காலிக மருத்துவமனைகள் அமைக்கப்பட்டுள்ளன.