உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் சிக்கிய தொழிலாளர்கள் அனைவரும் பத்திரமாக மீட்பு
உத்தரகாண்ட் மாநிலத்தின் உத்தர்காசி மாவட்டத்தில் சில்க்யாராவில் அமைக்கப்படும் சுரங்கப்பாதையில் ஏற்பட்ட விபத்தில், அதனுள்ளே பணியில் இருந்த 41 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர்.
உத்தர்காசி,
உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணி 17-வது நாளாக நடைபெற்றது. தற்போது இடிபாடுகளை அகற்றும் பணி முடிந்து உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் சிக்கிய தொழிலாளர்கள் ஒவ்வொருவராக மீட்கப்படுகின்றனர்.
சுரங்க விபத்தில் சிக்கிய தொழிலாளர்களுக்கு தலா ரூ.1 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும் என்றும் 41 தொழிலாளர்களும் தங்கள் வீடுகளுக்கு சென்று வர 15 நாட்கள் ஊதியத்துடன் விடுப்பு தரவும் பரிந்துரை செய்துள்ளதாக உத்தரகாண்ட் முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி கூறியுள்ளார்.
சுரங்கத்தில் இருந்து மீட்கப்பட்ட தொழிலாளர்கள் சுரங்க வாயிலில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுகின்றனர்.
உத்தரகாண்ட் சுரங்கத்தில் இருந்து இதுவரை 33 தொழிளார்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
மீட்கப்பட்டு அழைத்து வரப்படும் தொழிலாளர்களிடம் முதல் மந்திரி புஷ்கர் சிங் தாமி, மத்திய அமைச்சர் விகே சிங் நலம் விசாரித்து வருகின்றனர்.
சுரங்கத்தில் இருந்து மீட்கப்பட்ட தொழிலாளர்கள் சுரங்க வாயிலில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுகின்றனர்.
410 மணி நேரத்திற்கு பிறகு சுரங்க தொழிலாளர்கள் சுதந்திர காற்றை சுவாசிக்க ஆரம்பித்துள்ளனர். 17 நாட்களாக நடைபெற்று வந்த மீட்பு பணியில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினருடன்பல்வேறு மீட்புக்குழுவினரும் சாதித்துள்ளது.
உத்தராகண்ட் சுரங்கப்பாதை விபத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்க பொருத்திய குழாய்க்குள் சென்றது மீட்புக் குழு!இன்னும் சில நிமிடங்களில் தொழிலாளர்களை மீட்கும் பணி தொடங்கவுள்ளது.