மதுபோதையில் கணவர்: பல முறை கூறியும் திருந்தாததால் ஆசிட் ஊற்றிய மனைவி!

கான்பூரில் குடிப்பழக்கத்தை நிறுத்துமாறு பல முறை கூறியும் அதை நிறுத்தாத கணவர் மீது மனைவி ஆசிட் வீசிய சம்பவம் நடந்துள்ளது.

Update: 2023-01-31 04:20 GMT

கான்பூர்,

உத்தரபிரதேசம் மாநிலம் கான்பூரில் மதுபோதையில் இருந்த கணவர் முகத்தில் மனைவி ஆசிட் வீசியுள்ளார். இதுதொடர்பாக கணவர் கலெக்டர்கஞ்ச் காவல் நிலையத்தில் அளத்த புகாரின் பேரில் அந்த ஆசிட் வீச்சில் ஈடுபட்ட மனைவியை போலீசார் கைது செய்தனர்.

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் குடிபழக்கத்துக்கு அடிமையாகி, அதை நிறுத்துமாறு பல முறை கூறியும் கேட்காததால் கணவர் மீது ஆசிட் வீசியதாக பெண் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதற்கிடையே ஆசிட் வீச்சால் பாதிப்புக்குள்ளானவர் தப்பு குப்தா (40) என்பதும், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, கடந்த சனிக்கிழமை இரவு தப்பு குப்தா வீட்டுக்கு தாமதமாக வந்துள்ளார். இதற்கான காரணத்தை அவரது மனைவி கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், தனது கையில் இருந்த பாட்டிலை திறந்து ஆசிட்டை தனது முகத்தில் வீசியதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணையில் தப்பு குப்தா குடிக்கு அடிமையாகி இருப்பதால்தான் அவர் மீது இந்த ஆசிட் வீச்சு தாக்குதல் நிகழ்ந்துள்ளது என தெரியவந்தது. இதுமட்டுமில்லாமல், போதை வஸ்துக்களின் பழக்கமும் தப்பு குப்தாவுக்கு இருந்த வந்த காரணத்தால், அவருக்கும், மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டிருப்பதும் கூறப்படுகிறது.

தற்போது ஆசிட் வீச்சில் ஈடுபட்ட தப்பு குப்தா மனைவி கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், அவரிடம் விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்