உத்திரப்பிரதேசம்: இருசக்கர வாகன விபத்தில் 5 பேர் பரிதாப பலி
உத்திரப்பிரதேசத்தில் இருசக்கர வாகன விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பாரபங்கி,
பாரபங்கி மாவட்டத்தில் பிண்டவுரா கிராமத்துக்கு அருகே நடந்த விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து அதிகாரி தினேஷ் குமார் கூறுகையில்,
பாரபங்கி மாவட்டத்தை சேர்ந்தவர் பிரஷாந்த் துபே. இவரது நண்பர்கள் பங்கஜ் மிஷ்ரா, தீபக் கவுதம் (வயது 28), அபிஷேக் ஷர்மா (23), ஷிவ்காரன் கவுதம் (32). இவர்கள் 5 பேரும் மசவுலி போலீஸ் நிலையத்துக்கு உட்பட பிண்டவுரா கிராமத்துக்கு அருகே இரண்டு மோட்டார் சைக்கிள்களில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாரதவிதமாக இரண்டு பைக்குகளும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்கு உள்ளானது. இதில் 5 பேரும் சாலையில் விழுந்தனர். அப்போது அவ்வழியே வந்த லாரி ஒன்று அவர்கள் மீது ஏறி விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
பலத்த காயம் அடைந்த ஒருவரை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அணுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரை போலீசார் தேடி வருவதாகவும் தெரிவித்தார்.
இந்த விபத்து தொடர்பாக உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளதாக அம்மாநில அரசு கூறியுள்ளது.