உத்தர பிரதேசம்: கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 2 சிறுமிகள் - தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுப்பு

செங்கல் சூளையில் வேலை செய்து வந்த சிறுமிகளை 3 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

Update: 2024-02-29 11:31 GMT

Image Courtesy : PTI

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டம் கடம்பூர் பகுதியில் உள்ள செங்கல் சூளையில் 2 மைனர் சிறுமிகள் வேலை செய்து வந்தனர். இந்த சிறுமிகளை சில நாட்களுக்கு முன்பு, செங்கல் சூளையின் காண்டிராக்டர் ராம்பூர் நிஷாத்(48), அவரது மகன் ராஜூ(18) மற்றும் உறவினர் சஞ்சய்(19) ஆகிய 3 பேர் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

மேலும் இந்த செயலை அவர்கள் வீடியோவாக பதிவு செய்து 2 சிறுமிகளையும் மிரட்டி வந்துள்ளனர். இதனால் சிறுமிகள் இருவரும் கடும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளனர். இந்த நிலையில், செங்கல் சூளையில் இருந்து சுமார் 400 மீட்டர் தூரத்தில் உள்ள ஒரு மரத்தில் நேற்று மாலை சிறுமிகள் 2 பேரின் உடல்களும் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 3 நபர்களையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த வீடியோக்களை பறிமுதல் செய்த போலீசார், குற்றவாளிகள் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இதனிடையே உயிரிழப்புக்கான உண்மையான காரணத்தை கண்டறியவும், கூட்டு பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டை உறுதி செய்யவும் 2 சிறுமிகளின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்