திருமணம் செய்துவைக்க பெற்றோர் முயற்சி - இளைஞனுடன் வீட்டை விட்டு வெளியேறிய சிறுமிகள்...!

திருமணம் செய்துவைக்க பெற்றோர் முயற்சித்ததால் அக்கா-தங்கை வீட்டை விட்டு வெளியேறினர்.

Update: 2022-05-23 16:08 GMT

மும்பை,

மராட்டிய மாநிலம் மும்பையின் ஹட்கோபுர் பகுதியை சேர்ந்த 17 வயது மற்றும் 16 வயது அக்கா- தங்கைகளுக்கு அவர்களின் பெற்றோர் இரு இளைஞர்களுக்கு திருமணம் செய்துவைக்க திட்டமிட்டனர்.

இந்த திருமணத்திற்கு அக்கா- தங்கையான சிறுமிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். சிறுமிகளின் எதிர்ப்பையும் மீறி திருமணம் ஏற்பாடுகளை சிறுமிகளின் பெற்றோர் செய்து வந்தனர்.

இதனால், தங்கள் வீடு இருக்கும் பகுதியில் வசித்து வந்த 21-வயதான வேறொரு இளைஞனுடன் சிறுமிகள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறினர்.

இது குறித்து சிறுமிகளின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். புகாரை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுமிகளை கடத்தி சென்றதாக 21-வயது இளைஞன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், மராட்டியத்தின் பல்வேறு நகரங்களுக்கு சென்ற சிறுமிகள் இருவரும் 6 நாட்களுக்கு பின் இன்று வீடு திரும்பினர். சிறுமிகளுடன் சென்ற 21 வயது இளைஞனும் திரும்பி வந்தார்.

இதனை தொடர்ந்து சிறுமிகளை பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசார் அந்த இளைஞன் மீது கடத்தல் வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்