உ.பி.: லக்னோவில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து- ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு.!

உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Update: 2023-09-16 06:35 GMT

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் ஆனந்த் நகர் பகுதியில் உள்ள பழைய ரெயில்வே காலனியில் அமைந்துள்ள வீட்டின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் வீட்டில் இருந்த 3 குழந்தைகள் உட்பட 5 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கினர். அவர்களை மாநில பேரிடர் குழு மற்றும் உள்ளூர் போலீசார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்கள் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார்.

 

Tags:    

மேலும் செய்திகள்