உ.பி.: பள்ளிக்கட்டணம் செலுத்தாத 1ம் வகுப்பு மாணவனை அடித்து துன்புறுத்திய பள்ளி முதல்வர் கைது

உத்தரபிரதேத்தில் கட்டணம் செலுத்தாததற்காக 1 ஆம் வகுப்பு மாணவனை அடித்து துன்புறுத்தியதாக பள்ளியின் முதல்வர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-02-11 19:24 GMT

கோப்புப்படம் 

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் பல்லியா பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் கட்டணம் செலுத்தாததற்காக 1 ஆம் வகுப்பு மாணவனை அடித்து துன்புறுத்தியதாக பள்ளியின் முதல்வர் கைது செய்யப்பட்டார்.

இந்த விவகாரத்தில் முதல்வர் தவிர, ஆசிரியர், பள்ளி மேலாளர் ஆகியோர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்,

ராஸ்ரா நகரில் உள்ள தனியார் பள்ளியின் 1ம் வகுப்பு மாணவர் அயாஸ் அக்தரை, பள்ளிக் கட்டணம் செலுத்தாததற்காக ஜனவரி 27 அன்று தனது வகுப்பறையில் நான்கு மணி நேரம் இரு கைகளையும் உயர்த்தியபடி நிற்க வைத்துள்ளனர்.

பின்னர் மாணவனை தாக்கியதால், அவன் மயங்கி விழுந்ததாக குடும்பத்தினர் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.

இதன் அடிப்படையில் சத்யேந்திர பாலை கைது செய்துள்ளதாகவும், மேலும் இரு குற்றவாளிகளான பள்ளி மேலாளர் பிரத்யுமன் வர்மா மற்றும் ஆசிரியர் அப்சனா ஆகியோரை கைது செய்வதற்கான முயற்சிகள் நடந்து வருவதாகவும் அந்த அதிகாரி கூறினார்.

 

Tags:    

மேலும் செய்திகள்