உ.பி.: வேறு சாதி நபருடன் திருமணம்; இளம்பெண்ணை ஆணவ படுகொலை செய்த மாமா, மைனர் மகன்

உத்தர பிரதேசத்தில் வேறு சாதி நபரை திருமணம் செய்த இளம்பெண்ணை, மாமா அவரது மைனர் மகன் ஆணவ கொலை செய்துள்ளனர்.;

Update:2023-05-07 12:32 IST

லக்னோ,

உத்தர பிரதேசத்தின் சீதாப்பூர் மாவட்டத்தில் பஜ்நகர் கிராமத்தில் பிசாவன் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில், வசித்து வருபவர் புடான் சிங் தோமன். இவரது மகளான20 வயது இளம்பெண் அதே கிராமத்தில் வசிக்கும் ரூப் சந்திர மவுரியா என்ற இளைஞரை காதலித்து வந்து உள்ளார்.

அந்த இளைஞருக்கு முன்பே திருமணம் நடந்து விட்டது என கூறப்படுகிறது. எனினும் இவர்களது காதல், திருமணத்தில் முடிந்து உள்ளது. இதன்படி, கடந்த ஆண்டு நவம்பரில் இளம்பெண்ணை காசியாபாத் நகருக்கு வரும்படி, ரூப்சந்திரா கூறியுள்ளார்.

அவர்கள் இருவரும் கோர்ட்டு ஒன்றில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். அதன்பின் சில நாட்கள் ஒன்றாக வசித்து வந்தனர். சமீபத்தில் அவர்கள் கிராமத்திற்கு திரும்பி உள்ளனர்.

வேறு சாதி நபரை காதலித்து, திருமணம் செய்ததற்காக இளம்பெண்ணை கொலை செய்ய அவரது மாமா திட்டம் தீட்டி வந்து உள்ளார். இதனை தொடர்ந்து, வீட்டில் இருந்த அந்த பெண்ணை வெளியே இழுத்து சென்று, கொலை செய்து உள்ளனர்.

இந்த சம்பவத்தில், இளம்பெண்ணின் மாமா, அவரது மைனர் மகன் உள்பட அவருடைய குடும்பத்தினர் மீது ரூப்சந்திராவின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்து உள்ளனர்.

வேறு கோணங்களிலும் விசாரணை நடந்து வருகிறது என சீதாப்பூர் காவல் கண்காணிப்பாளர் நரேந்திர பிரதாப் சிங் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு டிசம்பரில் கூட உத்தர பிரதேசத்தின் பிஜ்னோர் மாவட்டத்தில், இதேபோன்றதொரு சம்பவம் நடந்தது. தனது மகளின் காதலரை ஆணவ படுகொலை செய்ததற்காக தந்தை உள்பட சிலர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த சம்பவத்தில் அவர் மகள் மீது தாக்குதல் நடத்தி, விட்டு விட்டார். இந்த வழக்கில் 4 குற்றவாளிகளை போலீசார் கைது செய்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்