மனைவியுடன் கள்ளத்தொடர்பு இருப்பதாக சந்தேகம் - 24 வயது இளைஞரை அடித்துக் கொன்ற கணவன்

மனைவியுடன் கள்ளத்தொடர்பு இருப்பதாக ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் 24 வயது இளைஞர் ஒருவரை கணவன் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2023-06-23 17:47 GMT

பண்டா,

உத்தரபிரதேசத்தில் மனைவியுடன் கள்ளத்தொடர்பு இருப்பதாக ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் 24 வயது இளைஞர் ஒருவரை கணவன் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மஹோகர் கிராமத்தில் வியாழக்கிழமை இரவு நந்த் கிஷோர் வர்மா (வயது 24) என்ற இளைஞர் தனக்கு பழக்கம் உள்ள பெண்ணின் வீட்டுக்கு சென்றுள்ளார். இந்த நிலையில் அந்த பெண்ணுடன் அவருக்கு கள்ளத்தொடர்பு இருப்பதாக சந்தேகப்பட்ட அந்த பெண்ணின் கணவன் மற்றும் மைத்துனர் உள்ளிட்ட சிலர் அந்த இளைஞரை சரமாரியாக தாக்கினர்.

இந்த நிலையில் கிராமத்தில் திருடன் பிடிபட்டதாகவும் மோசமாக தாக்கப்பட்டதாகவும் இரவில் போலீசாருக்கு அழைப்பு வந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கவலைக்கிடமான நிலையில் இருந்த கிஷோரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது தொடர்பாக அந்த பெண்ணின் கணவர், மைத்துனர் உள்ளிட்ட 4 பேர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்