இலங்கை அதிபரை வரவேற்ற மத்திய இணை மந்திரி எல்.முருகன்
3 நாட்கள் பயணமாக இந்தியா வந்தடைந்தார் இலங்கை அதிபர் திசநாயகா.;
புதுடெல்லி,
இலங்கையில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் கட்சி சார்பில் போட்டியிட்ட அனுர குமார திசநாயகா அமோக வெற்றி பெற்றார். இதனையடுத்து அந்த நாட்டின் அதிபராக அவர் பதவியேற்று கொண்டார்.
இந்தநிலையில் இலங்கை அதிபர் திசநாயகா 3 நாட்கள் அரசுமுறை பயணமாக இன்று இந்தியா வந்தடைந்தார். டெல்லி விமான நிலையம் வந்தடைந்த அதிபர் திசநாயகாவை மத்திய இணை மந்திரி எல்.முருகன் மற்றும் இந்திய அதிகாரிகள் வரவேற்றனர். இலங்கை அதிபராக திசநாயகா பதவியேற்றதை தொடர்ந்து முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியா வந்துள்ளார்.
இலங்கை அதிபர் திசநாயகா நாளை பிரதமர் மோடி, ஜனாதிபதி திரவுபதி முர்மு ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். அப்போது அவர் இருநாடுகளிடையே நிலவும் மீனவ பிரச்சினை, எதிர்க்கால திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்படலாம் என தெரிகிறது.