கர்நாடகாவில் மத்திய மந்திரி சென்ற கார் விபத்துக்குள்ளானது - மந்திரி காயம்

கர்நாடக நெடுஞ்சாலையில் மத்திய மந்திரி சாத்வி நிரஞ்சன் ஜோதி சென்ற கார், லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் மந்திரி காயமடைந்தார்.

Update: 2023-03-16 17:34 GMT

விஜயபுரா,

கர்நாடக மாநிலம் விஜயபுராவில் மத்திய மந்திரி சாத்வி நிரஞ்சன் ஜோதி சென்ற கார், லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் அவர் காயமடைந்தார்.

முன்னதாக கர்நாடகாவில் பாஜக ஏற்பாடு செய்திருந்த பெண்கள் மாநாடு நிகழ்ச்சியில் மந்திரி ஜோதி கலந்து கொண்டார். இந்த நிலையில் தேசிய நெடுஞ்சாலை 50-ல் அவரது கார் சென்று கொண்டிருந்த போது லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் மந்திரி மற்றும் அவரது டிரைவருக்கு லேசான காயம் ஏற்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

லாரி டிரைவர் குடிபோதையில் இருந்ததாகவும், அவரை போலீசார் கைது செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. செய்தியாளர்களிடம் பேசிய மந்திரி ஜோதி, "கடவுளின் அருளால் நான் பாதுகாப்பாக இருக்கிறேன். டிரைவரின் எச்சரிக்கையால் லாரிக்கு அடியில் சிக்காமல் தப்பினோம். எங்களுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டன. எல்லாம் சரியாகிவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்