ஓடுபாதையில் ஒரே நேரத்தில் இரு விமானங்கள்... மும்பை விமான நிலையத்தில் பரபரப்பு
ஒரே ஓடுபாதையில் இரு விமானங்கள இயக்கப்பட்ட விவகாரத்தில் தொழில்நுட்ப பணியாளர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.;
மும்பை,
மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தின் 27வது ஓடுபாதையில் நேற்று ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட்டது. அப்போது அதே நேரத்தில் அதே ஓடுபாதையில் இந்தூரில் இருந்து வந்த இண்டிகோ விமானம் தரையிறங்கியது.
குறிப்பிட்ட இடைவெளியில் ஒரே ஓடுபாதையில் இயக்கப்பட்ட இரு விமானங்களால் மும்பை விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் நல்வாய்ப்பாக எந்தவித அசம்பாவிதமும் ஏற்படவில்லை. இருப்பினும் அலட்சியமாக செயல்பட்ட தொழில்நுட்ப பணியாளர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
மேலும் இதுதொடர்பாக விரிவான விசாரணை நடத்த விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. ஒரே ஓடுபாதையில் இரு விமானங்கள் இயக்கப்பட்ட விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.