வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் நடிகை பிணமாக மீட்பு - அதிர்ச்சி சம்பவம்

வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் நடிகை பிணமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2022-06-20 13:27 GMT

புவனேஷ்வர்,

ஒடிசா மாநில டிவி சீரியல்களில் நடித்து பிரபலமானவர் ராஷ்மிர்ஹா ஓஜா (வயது 23). இவர் சந்தோஷ் பத்ரா என்ற நபருடன் திருமணம் செய்துகொள்ளாமல் 'லிவ் இன்' உறவு முறையில் வாழ்ந்து வந்துள்ளார். ராஷ்மிர்ஹாவும் சந்தோஷ் பத்ராவும் நியப்பள்ளி நகரில் ஒரு வாடகை வீட்டில் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்நிலையில், நடிகை ராஷ்மிர்ஹா வீட்டில் தூக்கிட்ட நிலையில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சந்தோஷுடன் வசித்து வந்த வாடகை வீட்டில் உள்ள ஒரு அறையில் ராஷ்மிர்ஹா தூக்கில் தொங்கிய நிலையில் நேற்று பிணமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, தனது மகள் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், மகளின் மரணத்தில் சந்தோஷுக்கு தொடர்பு இருப்பதாகவும் நடிகை ராஷ்மிர்ஹாவின் தந்தை குற்றச்சாட்டியுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்