கேரளாவில் சோகம்; தொலைக்காட்சி பெட்டி விழுந்து ஒன்றரை வயது குழந்தை பலி
அப்துல் பிடித்து இழுத்ததில் துரதிர்ஷ்டவசத்தில் மேசையும், தொலைக்காட்சி பெட்டியும் சேர்ந்து விழுந்திருக்க கூடும் என கூறப்படுகிறது.
கொச்சி,
கேரளாவின் துறைமுக நகரான கொச்சி அருகே மூவாட்டுப்புழா பகுதியில் வசித்து வருபவர் அனாஸ். பயிபரா பகுதியை சேர்ந்த இவருடைய ஒன்றரை வயது மகன் அப்துல் சமது. இந்நிலையில், வீட்டில் இருந்த தொலைக்காட்சி பெட்டி நேற்றிரவு 9.30 மணியளவில் அப்துல் மீது சரிந்து விழுந்து உள்ளது.
இதனை அறிந்ததும் அப்துலை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும், சிகிச்சை பலனின்றி இன்று காலை அனாசின் மகன் அப்துல் உயிரிழந்து விட்டான். தொலைக்காட்சி பெட்டி இருந்த மேசையை அப்துல் அறியாமல் தொட்டு, இழுத்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
இதில், அந்த மேசை ஆடி துரதிர்ஷ்டவசத்தில் மேசையும், தொலைக்காட்சி பெட்டியும் சேர்ந்து அப்துலின் மீது விழுந்திருக்க கூடும் என கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது. இதுபற்றி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.