நிலக்கரி ஏற்றிவந்த கப்பலில் இருந்து இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற கானா நாட்டினர் - அதிர்ச்சி சம்பவம்

நிலக்கரி ஏற்றிவந்த கப்பலில் பதுங்கி இருந்த கானா நாட்டினர் இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2024-08-31 11:01 GMT

புவனேஷ்வர்,

சீனாவுக்கு சொந்தமான சரக்கு கப்பல் ரஷியாவில் இருந்து நிலக்கரி ஏற்றிக்கொண்டு நேற்று இந்தியா வந்தடைந்தது. ஒடிசாவில் உள்ள தனியார் இரும்பு ஆலைக்கு நிலக்கரி இறக்குமதி செய்வதற்காக கப்பல் ஜகத்சிங்பூர் மாவட்டத்தில் உள்ள பாரதீப் துறைமுகத்திற்கு வந்துள்ளது.

கப்பலில் இருந்து நிலக்கரி துறைமுகத்தில் இறக்கிக்கொண்டிருந்தபோது கப்பலை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது, கப்பலில் 20 மாலுமிகள் உள்ளதாக கொடுக்கப்பட்ட தகவலுக்கு மாறாக மேலும் 3 பேர் இருந்துள்ளனர்.

அவர்களிடம் விசாரணை நடத்தியபோது அவர்கள் 3 பேரும் ஆப்பிரிக்காவின் கானா நாட்டை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. மேலும், அவர்கள் கப்பலில் இருந்து வெளியேறி இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றதும் தெரியவந்தது.

இதையடுத்து, 3 பேரையும் கப்பலிலேயே சிறைபிடித்த அதிகாரிகள் நிலக்கரி இறக்கும் வரை யாரும் வெளியே வரக்கூடாது என உத்தரவிட்டனர். மேலும், நிலக்கரி இறக்கியவுடன் 3 பேரையும் அதேகப்பலிலேயே அழைத்து செல்லவேண்டும் என கூறினர். அதே கப்பல் இந்தியாவின் வேறு துறைமுகங்களுக்கு சென்றாலும் கானா நாட்டை சேர்ந்த 3 பேரும் கப்பலை விட்டு கீழே இறங்கக்கூடாது என்றும் தெரிவித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்