நின்று கொண்டிருந்த பஸ் மீது கார் மோதி விபத்து - 3 பேர் பலி
டெல்லியில் நின்று கொண்டிருந்த பஸ் மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
புதுடெல்லி,
டெல்லியில் நங்லி பூனா அருகே நெடுஞ்சாலையில் உள்ள பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த டெல்லி போக்குவரத்துக் கழகம் (டிடிசி) பேருந்து ஒன்றின் மீது கார் மோதியதில் மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும் 2 வயது குழந்தை உட்பட இருவர் காயமடைந்தனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் இமாச்சலப்பிரதேசத்தில் இருந்து காரில் திரும்பி வந்து கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு பாபு ஜக்ஜீவன் ராம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், அங்கு மருத்துவர்கள் 3 பேர் இறந்துவிட்டதாக அறிவித்தனர்.
அதர்வ் என்ற 2 வயது குழந்தையின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இதையடுத்து அந்த குழந்தை ஃபோர்டிஸ் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளது.