பாகிஸ்தானில் இருந்து 3.5 கிலோ போதைப்பொருள் கடத்திவந்த மூவர் கைது

பஞ்சாபை சேர்ந்தை மூவர், பாகிஸ்தானில் இருந்து போதைப்பொருள் கடத்திவந்ததாக கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-05-22 00:40 GMT

கோப்புப்படம்    

அமிர்தசரஸ்,

பாகிஸ்தானில் இருந்து பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசுக்கு போதைப்பொருள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. ரகசிய தகவலை அடுத்து அமிர்தசரஸில் உள்ள தரன் வாலா பாலம் அருகே 3.5 கிலோ ஹெராயின் போதைப்பொருளுடன் 3 பேரை பஞ்சாப் சிறப்பு அதிரடிப்படை போலீசார் கைதுசெய்தனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் கிழக்கு கோபிந்த் நகரைச் சேர்ந்த அம்ரிக் சிங் மற்றும் அவரது மகன் பிரப்தீப் சிங் மற்றும் அமிர்தசரஸில் உள்ள நியூ ப்ரீத் நகரைச் சேர்ந்த சரப்ஜித் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் ஹெராயின் போதைப்பொருள் விநியோகத்திற்காக சில பாகிஸ்தானிய கடத்தல்காரர்களுடன் தொடர்பில் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் எப்படி பாகிஸ்தான் கடத்தல்காரர்களுடன் தொடர்பு கொண்டார்கள் என்பதை அறிய முயற்சிக்கிறோம் என்றும், மீட்கப்பட்ட ஹெராயின் போதைப்பொருள் டிரோன் விமானம் மூலம் கடத்தப்பட்டதா என்பது குறித்தும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்