'லவ் ஜிகாத்'தை தடுக்க தனி சட்டம் தேவையில்லை

‘லவ் ஜிகாத்’தை தடுக்க தனி சட்டம் தேவையில்லை என்று போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா தெரிவித்துள்ளாா்.

Update: 2022-12-15 20:35 GMT

சிக்கமகளூரு:-

தனி சட்டம் தேவையில்லை

சித்ரதுா்காவில் நடந்த தனியார் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா, நேற்று முன்தினம் சித்ரதுர்காவுக்கு வந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

'லவ் ஜிகாத்'தை தடுக்க தனி சட்டம் இயற்ற வேண்டும் என்று சங்பரிவார் அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் மாநிலத்தில் மதமாற்ற தடை சட்டம் அமலில் உள்ளது. இந்த சட்டத்தில் 'லவ் ஜிகாத்'தை தடுப்பது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, தற்போதைக்கு லவ் ஜிகாத்துக்கு தனி சட்டம் அமல்படுத்த தேவையில்லை. இருப்பினும் இதுகுறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

தீவிர நடவடிக்கை

அரசியலமைப்பு சட்டத்தில் ஒருவர் விரும்பும் மதத்தை பின்பற்ற உரிமை உள்ளது. ஆனால், அதற்கு விதிமுறைகள் உள்ளது. யாரையும் பொன், பொருள், பணத்தை காண்பித்தும், கட்டாயப்படுத்தியும் மதம் மாற்ற முடியாது. இதனை தடுக்கவே மதமாற்ற தடை சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதன்மூலம், ஒருவர் ேவறு மதத்திற்கு மாறும் முன்பு விண்ணப்பிக்க வேண்டும். அந்த விண்ணப்பத்தின் அடிப்படையில் அது கட்டாய மதமாற்றமா அல்லது விரும்பத்துடன் மதம் மாறுகிறாரா என்று ஆராயப்படும். அதன்பிறகு தான் மதம் மாற்றத்துக்கு அனுமதிக்கப்படும்.

சித்ரதுர்கா உள்ளிட்ட மாநிலத்தில் பல பகுதிகளில் கட்டாய மதமாற்றம் தடையின்றி நடந்து வருகிறது. இதனை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்