டெல்லியில் பைக்கில் சாகசம் காட்டிய இளைஞர்...அபராதம் விதித்து தோப்புகரணம் போட வைத்த போலீஸ்!
டெல்லியில் பைக்கில் சாகசம் காட்டிய இளைஞருக்கு ரூ 4200 அபராதம் விதித்து தோப்புகரணம் போட வைத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 5 லட்சத்துக்கும் அதிகமான சாலை விபத்துகள் நடைபெற்று வருகிறது. இதில் பெரும்பாலும் இளைஞர்கள் சாலையில், சாகசத்தில் ஈடுபடுவதாக நினைத்து, வாகனங்களை சரியாக ஓட்டாமல் தங்களது ஸ்டைலில் விதிமுறைகளை மீறி ஓட்டுவது முடிவில் விபத்தில் கொண்டு போய் விடுகிறது.
அந்த வகையில், சட்டீஸ்கரின் ராய்ப்பூர் நக்லரில் தலைகவசம் அணியாமல், இருசக்கர வாகனத்தை, ஒரு புறம் காலிட்டு அமர்ந்து, ஒரே ஒரு கையால் இளைஞர் ஒருவர் ஓட்டி சென்றுள்ளார். அவரை பார்த்து கொண்ட கடந்த வாகன ஓட்டிகள் எச்சரித்தனர். ஒடுகட்டத்தில் இதனைக் கண்ட போலீசார் அவரை பிடித்த காவல் துறையினர், அவருக்கு ரூ.4,000 அபராதம் விகித்தனர். மேலும் அவரை தோப்புகரணம் போட சொல்லி, அந்த வீடியோவையும் இணையத்தில் பகிர்ந்துள்ளனர்.