2-வது சுற்றுப்பாதைக்கு சந்திரயான் - 3 விண்கலத்தை உயர்த்தும் முயற்சி வெற்றி - இஸ்ரோ தகவல்

2-வது சுற்றுப்பாதைக்கு சந்திரயான் - 3 விண்கலத்தை உயர்த்தும் முயற்சி வெற்றி பெற்றுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

Update: 2023-07-17 08:32 GMT

பெங்களூரு,

நிலவில் ஆய்வுக்காக அனுப்பப்பட்ட சந்திரயான்-3 விண்கலம் கடந்த 14-ம் தேதி வெற்றி கரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இந்தநிலையில், சந்திரயான் -3 ஐ 2-வது புவிவட்ட சுற்றுப்பாதைக்கு உயர்த்தும் பணி வெற்றிகரமாக முடிந்தது எனவும் சுற்றுப்பாதையை உயர்த்தும் பணி மீண்டும் நாளை மதியம் 2 மணி முதல் 3 மணி வரை நடத்த திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ கூறியுள்ளது.

179 கி.மீ தொலைவில் நிலைநிறுத்தப்பட்ட சந்திரயான் - 3 விண்கலம் 226 கி.மீ தொலைவிற்கு உயர்த்தப்பட்டுள்ளதாகவும் சந்திரயான் -3 விண்கலம் புவியில் இருந்து தற்போது 41,603 கி.மீ x 226 கி.மீ சுற்றுப்பாதையில் உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்