சிவமொக்கா விமான நிலையத்தில் முதல் முதலாக தரையிறங்கும் பிரதமரின் தனி விமானம்

சிவமொக்கா விமான நிலையத்தில் முதல் முதலாக தரையிறங்கும் பிரதமரின் தனி விமானத்திற்கு வரவேற்ப்பு அளிக்கப்படுகிறது.

Update: 2023-02-17 20:27 GMT

பெங்களூரு:-

கர்நாடகத்தில் மே மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கடி கர்நாடகத்திற்கு சுற்றுப்பயணம் வந்த வண்ணம் உள்ளனர். கடந்த 6-ந் தேதியும், கடந்த 13-ந் தேதி விமான கண்காட்சியை தொடங்கி வைக்கவும் பிரதமர் கர்நாடகம் வந்திருந்தார். இந்த நிலையில், இந்த மாதத்தில் 3-வது முறையாக வருகிற 27-ந் தேதி பிரதமர் நரேந்திர மோடி சிவமொக்கா மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார். சிவமொக்காவில் ரூ.1,789 கோடியில் புதிய விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த விமான நிலைய திறப்பு விழாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை தர உள்ளார்.

வருகிற 27-ந் தேதி தான் சிவமொக்கா விமான நிலையம் திறக்கப்பட இருக்கிறது. விமான நிலைய திறப்பு விழாவுக்காக டெல்லியில் இருந்து தனி விமானத்தில் சிவமொக்காவுக்கு பிரதமர் வருகை தர உள்ளார். அவர் வருகை தரும் தனி விமானம் சிவமொக்கா விமான நிலையத்திலேயே தரையிறங்க இருக்கிறது. இதன் மூலம் திறப்பு விழாவுக்கு முன்பாக சிவமொக்கா விமான நிலையத்தில் தரையிறங்கும் முதல் விமானம் பிரதமர் நரேந்திர மோடி வருகை தரும் தனி விமானம் என்ற சிறப்பை பெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்