'காணாமல் போன நாயை கண்டுபிடித்து தர வேண்டும்' முதல்-மந்திரியிடம், பெங்களூரு பெண் கோரிக்கை

காணாமல் போன நாயை கண்டுபிடித்து தரவேண்டும் என்று முதல்-மந்திரியிடம் பெண் ஒருவர் கோரிக்கை வைத்துள்ளார்.

Update: 2022-10-05 18:45 GMT

பெங்களூரு:

பெங்களூரு பசவேஸ்வராநகரில் வசித்து வருபவர் குருபிரியா. இவர் கடந்த 6 ஆண்டுகளாக முதோல் இன நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். அந்த நாயை தனது பிள்ளை போல பாவித்து குருபிரியா வளர்த்தார். இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு குருபிரியா வளர்த்து வந்த நாய் திடீரென காணாமல் போனது. இதனால் அதிர்ச்சி அடைந்த குருபிரியா, நாயை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தார். ஆனால் நாய் கிடைக்கவில்லை. இதையடுத்து தனது நாயை கண்டுபிடித்து தருபவர்களுக்கு ரூ.50 ஆயிரம் பரிசாக அளிக்கப்படும் என்றும் குருபிரியா கூறி இருந்தார்.

ஆனால் இன்னும் காணாமல் போன நாயை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் காணாமல் போன நாயை கண்டுபிடித்து தர உதவ வேண்டும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு, குருபிரியா சமூக வலைத்தளம் மூலம் கோரிக்கை விடுத்து உள்ளார். இதையடுத்து முதல்-மந்திரி அலுவலகத்தில் இருந்து பசவேஸ்வரா நகர் போலீசாரை அழைத்து பேசிய அதிகாரிகள் நாயை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டு உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்