"குழந்தைகளுக்கு பெயர் வைக்கும் ஆர்வமே போய்விட்டது" - திருமாவளவன் வேதனை
குழந்தைகளுக்கு பெயர் வைக்கும் ஆர்வமே போய்விட்டது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி,
புதுச்சேரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது,
பலர் என்னிடம் குழந்தையை கொடுத்து பெயர் வைக்க செல்வார்கள். நானும் தமிழ் பெயர் சூட்டிவிடுவேன். அந்த குழந்தை வளர்ந்த பிறகு, குழந்தையின் பெயர் என்ன என்று கேட்டால், அது வேறு பெயர் செல்லுகிறது. பெயர் வைத்தே ஆகவேண்டும் என்று கட்டாயப்படுத்தி பெயர் வைத்துவிட்டு, சான்றிதழில் வேறு பெயர் இருக்கு. இதனால் குழந்தைகளுக்கு பெயர் சூட்டும் ஆர்வமே தனக்கு போய்விட்டது.