தொழில்துறைக்கு திறன்மிக்க மனிதவளம் அதிகம் தேவை- மந்திரி அஸ்வத் நாராயண் பேச்சு

தொழில்துறைக்கு திறன்மிக்க மனிதவளம் அதிகம் தேவை என்று மந்திரி அஸ்வத் நாராயண் பேசியுள்ளார்.

Update: 2022-07-25 21:22 GMT

பெங்களூரு: மாணவர்கள் அறிவியல் திட்ட கண்காட்சி மற்றும் போட்டி நிகழ்ச்சி பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் உயர்கல்வித்துறை மந்திரி அஸ்வத் நாராயண் கலந்து கொண்டு பேசியதாவது:- 21-வது ஆண்டு உலக போட்டி மற்றும் தரமான கல்வி யுகம் ஆகும். இதில் நாம் இலக்கை அடைய புதிய கல்வி கொள்கையில் ஆராய்ச்சி மற்றும் புதுமைகளை புகுத்துதலுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. புதுமைகளை புகுத்துவதில் இந்தியாவில் கர்நாடகம் முதல் இடத்தில் உள்ளது. இது அறிவுசார் பொருளாதாரத்திற்கு வழி ஏற்படுத்துகிறது. இந்த கல்வி முறை கடந்த ஆண்டே அமல்படுத்தப்பட்டுள்ளது. புத்தொழில், தகவல்-உயிரி தொழில்நுட்பம் மற்றும் நவீன துறைகளில் கர்நாடகம் முன்னணியில் உள்ளது.

மேலும் கல்வித்துறையுடன் தொழில் துறைக்கு தொடர்பு ஏற்படுத்தியுள்ளோம். தொழில் துறைக்கு திறன்மிக்க மனித வளம் அதிகளவில் தேவைப்படுகிறது. இந்த தேவையை பூர்த்தி செய்ய உயர்கல்வி மற்றும் தொழில்நுட்ப கல்வியில் சீர்திருத்தங்களை செய்துள்ளோம்.

இவ்வாறு அஸ்வத் நாராயண் பேசினார்.

இதில் இஸ்ரோ தலைவர் சோமநாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்