'பதான்' படத்தை வெளியிடக்கூடாது..! தியேட்டர் உரிமையாளர்களை மிரட்டிய நபர் கைது

‘பதான்’ படத்தை வெளியிடக் கூடாது என்று தியேட்டர் உரிமையாளர்களை மிரட்டிய நபரை அகமதாபாத் சைபர் கிரைம் போலீஸார் கைது செய்தனர்.

Update: 2023-01-20 14:35 GMT

ஆமதாபாத்,

நடிகர் ஷாருக் கான் மற்றும் நடிகை தீபிகா படுகோனே நடிப்பில் உருவான திரைப்படம் பதான். இந்த ஆண்டு ஜனவரியில் படம் திரையரங்கிற்கு வர இருக்கிறது. இதனையொட்டி படத்தின் டிரைலர் மற்றும் பாடல் கடந்த டிசம்பரில் வெளியிடப்பட்டது. இதில், பேஷாராம் ரங் பாடலானது கடும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. அதில் நடித்துள்ள தீபிகா படுகோனே காவி நிற உடையில் காணப்படுகிறார் என சர்ச்சை வெடித்தது. பாடலில் படுகவர்ச்சியுடன் காட்சிகளும் இடம் பெற்றிருந்தன. காவி நிறத்திலான பிகினி உடையில் தீபிகா தோன்றிய காட்சிகள் வெளியிடப்பட்டன. இது இந்துமத உணர்வுகளை புண்படுத்தும் நோக்கில் உள்ளது என்று பல்வேறு இந்து அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்த நிலையில் 'பதான்' படத்தை வெளியிடக் கூடாது என்று தியேட்டர் உரிமையாளர்களை மிரட்டிய நபரை அகமதாபாத் சைபர் கிரைம் போலீஸார் கைது செய்தனர்.

சன்னி ஷா என்ற அந்த நபர் சமீபத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்., அதில் அவர் 'பதான்' படத்தை வெளியிடக்கூடாது என்று தியேட்டர் உரிமையாளர்களை மிரட்டியதாக கூறப்படுகிறது.மேலும் அந்த வீடியோவில் எந்த திரையரங்க உரிமையாளரும் பதான் படத்தை இயக்க முடிவு செய்தால், அவர்களது திரையரங்குகள் தீ வைத்து கொளுத்தப்படும் என ஷா மிரட்டியதாக கூறப்படுகிறது.

போலீசாரின் தகவலின்படி , ஷா முன்பு இந்து அமைப்பான கர்னி சேனாவில் உறுப்பினராக இருந்தார். என தெரிவிக்கப்ட்டுள்ளது .இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்