மின்சார ஸ்கூட்டர் வெடித்து வீட்டில் தீப்பிடித்தது

மண்டியாவில், சார்ஜ் செய்தபோது மின்சார ஸ்கூட்டர் வெடித்து வீட்டில் தீப்பிடித்து எரிந்தது. அதிர்ஷ்டவசமாக 5 பேர் உயிர் தப்பினர்.

Update: 2023-03-14 04:30 GMT

மண்டியா-

மண்டியாவில், சார்ஜ் செய்தபோது மின்சார ஸ்கூட்டர் வெடித்து வீட்டில் தீப்பிடித்து எரிந்தது. அதிர்ஷ்டவசமாக 5 பேர் உயிர் தப்பினர்.

மின்சார ஸ்கூட்டர்  வெடித்தது

மண்டியா மாவட்டம் மத்தூர் தாலுகா வலேகெரேஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் முத்துராஜ். இவர் மின்சார ஸ்கூட்டர் வைத்திருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு முத்துராஜ், மின்சார ஸ்கூட்டரை வீட்டின் முன்பு நிறுத்தி சார்ஜிங் வைத்திருந்தார். பின்னர் முத்துராஜ் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் திடீரென்று அந்த சார்ஜிங் செய்து கொண்டிருந்த மின்சார ஸ்கூட்டர் திடீரென்று பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. அத்துடன் தீப்பிடித்து எரிந்தது. அந்த தீ வீட்டுக்குள்ளும் பரவி எரிந்தது. வீட்டில் இருந்த டி.வி., பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்களும் எரிந்தது.

5 பேர் உயிர் தப்பினர்

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த முத்துராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டில் பிடித்து எரிந்த தீயையும், ஸ்கூட்டரில் பிடித்து எரிந்த தீயையும் தண்ணீரை ஊற்றி அணைத்தனர். பிரிட்ஜ் மற்றும் டி.வி.யில் தீப்பிடித்து எரிந்ததும் உடனடியாக அவர்கள் தண்ணீரை ஊற்றி அணைத்ததால், அவை வெடிக்கவில்லை. ஆனாலும் டி.வி.யும், பிரிட்ஜும் எரிந்து நாசமாகின. மின்சார ஸ்கூட்டரும் முற்றிலும் எரிந்து நாசமானது. அதிர்ஷ்டவசமாக ஸ்கூட்டர் வெடிக்கும்போது, அருகில் யாரும் இல்லாததால் முத்துராஜ் உள்பட 5 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் மத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். இதுகுறித்து மத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்