மேகதாது திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கி இருக்க வேண்டும்

மேகதாது திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கி இருக்க வேண்டும் என்று டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.

Update: 2023-02-06 20:42 GMT

பெங்களூரு:-

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

யாத்திரை நடத்துகிறேன்

நானும், சித்தராமையாவும் மக்கள் குரல் யாத்திரையை தனித்தனியாக தொடங்கியுள்ளோம். இதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. இன்று (நேற்று) சித்ரதுர்காவில் யாத்திரை நடத்துகிறேன். சித்ரதுர்கா முடிவடைந்த பிறகு சிவமொக்காவுக்கு செல்ல உள்ளோம். இதற்கிடையே வருகிற 10-ந் தேதி கா்நாடக சட்டசபை கூட்டத்தொடர் தொடங்குகிறது.

அதில் நாங்கள் கலந்து கொள்ள வேண்டி இருப்பதால், 3 நாட்கள் மக்கள் குரல் யாத்திரையை நிறுத்த முடிவு செய்துள்ளோம். காங்கிரசின் யாத்திரைக்கு கிடைக்கும் மக்களின் ஆதரவால் பா.ஜனதா, ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் பீதியடைந்துள்ளனர். நாங்கள் எப்போதும் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வந்துள்ளோம். பத்ரா மேலணை திட்டத்திற்கு ரூ.5,300 கோடி வழங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

மேகதாது திட்டம்

அதேபோல் கிருஷ்ணா திட்டத்திற்கும் நிதி ஒதுக்கீடு செய்திருக்க வேண்டும். மேகதாது திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கி இருக்க வேண்டும். இந்த திட்டம் குறித்து தொழில்நுட்ப குழுவினருடன் நான் ஆலோசனை நடத்தியுள்ளேன். நாங்கள் விவசாயிகளை பாதுகாக்கும் திட்டங்களை அமல்படுத்துவோம். எங்களின் பஸ் யாத்திரை பஞ்சர் ஆகும் என்று எடியூரப்பா உள்பட பா.ஜனதா தலைவர்கள் கூறுகிறார்கள். இறுதியாக யார் பஞ்சர் ஆவார்கள் என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்