தமிழகத்திற்கு ரூ.5,769 கோடி விடுவித்தது மத்திய அரசு
ஜி.எஸ்.டி. வரி பகிர்வாக தமிழ்நாட்டிற்கு 5 ஆயிரத்து 769 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கியுள்ளது.
புதுடெல்லி,
ஜி.எஸ்.டி. வரி பகிர்வாக, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 318 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கியுள்ளது. 14-வது தவணையாக விடுவிக்கப்பட்டுள்ள இந்த தொகையில், தமிழ்நாட்டிற்கு 5 ஆயிரத்து 769 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கியுள்ளது.
மாநிலங்களின் மூலதன மற்றும் வளர்ச்சி செலவினங்களை வேகப்படுத்தி, மாநிலங்களின் கரங்களை வலுப்படுத்த வேண்டும் என்ற மத்திய அரசின் உறுதியின் அடிப்படையில் இந்த தொகை விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக மாதாந்திர தவணையாக 70 ஆயிரத்து 159 கோடி மட்டுமே விடுவிக்கப்படும் நிலையில், இந்த முறை இரண்டு மடங்காக மத்திய அரசு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.